சென்னை, பெங்களூரு மற்றும் மும்பையில் இருந்து நேரடியாக அயோத்திக்கு விமானங்கள் இயக்கப்படும் என்று ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா வருகின்ற 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அயோத்திக்கு வரும் ராமர் பக்தர்களுக்காக சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளது. ஜெய்ப்பூர் மற்றும் வாரணாசி உள்ளிட்ட நகரங்களில் இருந்து அயோத்திக்கு விமான சேவை இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.