
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் விரைவில் திறப்புவிழா காணவுள்ளது. நவம்பர் மாதத்தில் சில மர்ம நபர்கள் ராமர் கோயிலை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என்றும், முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என்றும் X தளத்தில் பதிவிட்டிருந்தனர். விசாரணையில் ஓம்பிரகாஷ் மிஸ்ரா என்பவர் மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.