
வயநாடு தொகுதியில் அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. முன்னதாக நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் ஒரு தொகுதியில் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதற்காக வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து தற்போது வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் வரும் நிலையில் ராகுல் காந்திக்கு பதிலாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரியங்கா காந்தி வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். நேற்று பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் தற்போது இதனை தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, ராகுல் காந்தி வாக்களித்த வயநாடு மக்களை ஏமாற்றிவிட்டார். பிரியங்கா காந்தி தற்போது அவருக்கு பதிலாக போட்டியிடுவதன் மூலம் வாரிசு அரசியல் நடக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. பாஜக ஒரு இளம் பெண் வேட்பாளரை அந்த தொகுதியில் நிறுத்தியுள்ளது. வயநாட்டில் பேரழிவு ஏற்பட்டபோது அதில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை நிலைப்பாடு என்ன. இதற்கு மக்கள் பதில் சொல்வார்கள் என்றார். மேலும் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை விமர்சித்ததற்கும் தமிழிசை கண்டனங்கள் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.