கோவை மாவட்டத்தில் சமீபத்தில் தன்னாட்சி கல்லூரியில் ராகிங் நடைபெற்றதை தொடர்ந்து அனைத்து கல்லூரிகளுக்கும் கல்லூரி கல்வி இயக்குனர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் ராகிங் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து கல்லூரிகளிலும் உள்ள ராகிங் தடுப்பு குழுக்கள் மூலமாக மாணவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும். ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ராகிங் தொடர்பாக மாணவர்களின் புகார்களை எளிதில் பெரும் விதமாக கல்லூரி முதல்வர்கள் செயல்பட வேண்டும். சட்டப்படி ராகிங் குற்றம் என்பது குறித்து மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.