உக்ரைனின் வான் பாதுகாப்புப் படையினர் இரவோடு இரவாக ஏவப்பட்ட 103 ரஷ்ய ஆளில்லா விமானங்களில் 52 விமானங்களை வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யாவின் 44 ட்ரோன்கள் தடத்தை விட்டு விலகியதாகவும் ஒரு ட்ரோன் உக்ரைனை விட்டு பெலரஸ் நாட்டிற்கு சென்று விட்டதாகவும் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

மீதமுள்ள ட்ரோன்களின் கதி என்ன என்பது குறித்து ராணுவம் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.இருப்பினும், Kherson, Mykolaiv, Chernihiv, Sumy, Zhytomyr மற்றும் Kyiv ஆகிய பகுதிகளில், ரஷ்ய தாக்குதலால் தனியார் வணிக நிறுவனங்கள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.