இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ஆனால் ரயிலில் டிக்கெட் கிடைப்பதை மிகவும் சிரமமாக உள்ளது. அதிலும் குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் விழா காலங்களில் வழக்கத்தை விட பயணிகள் அதிக அளவில் ரயிலில் பயணம் செய்வதால் டிக்கெட் முன்பதிவு முன்கூட்டியே முடிந்து விடுகிறது. இப்படியான நேரத்தில் ரயில் டிக்கெட் பலருக்கும் கிடைப்பதில்லை. இந்நிலையில் தற்போது இந்தியாவில் ஹோலி பண்டிகை வர உள்ளதால் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல இப்போதே டிக்கெட் முன்பதிவு செய்ய தொடங்கி விட்டனர். தற்போது டிக்கெட் முன்பதிவு உறுதிப்படுத்துவதற்கு பயணிகள் ஐ ஆர் சி டி சி இணையதளத்தை அணுகலாம்.

இதன் மூலமாக நீங்கள் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளை பெரும் வாய்ப்பு அதிகம். அதாவது டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயணிகள் ரயில்வே வாரியத்தின் ஐ ஆர் சி டி சி இணையதளத்தில் VIKALP என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலமாக முன் பதிவு செய்யப்பட்ட ரயில் மற்றும் அதே வழித்தடத்தில் இயங்கும் பிற ரயில்களில் விவரங்கள் தோன்றும். இல்லையென்றால் நீங்கள் முன் பதிவு செய்த டிக்கெட்டை தேர்வு செய்து சப்மிட் கொடுத்து உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.