
திருச்சி ரயில் நிலையத்தில் ரயில் எண் 12664 கொண்ட ஹவுரா எக்ஸ்பிரஸ் திருச்சியில் இருந்து கொல்கத்தா சென்று வருகிறது. இந்த ரயில் பல பகுதிகளை கடந்து 2025 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொல்கத்தா, ஹவுரா நகர் வரை சென்றுவர 35 மணி நேரம் மற்றும் 20 நிமிடங்கள் ஆகிறது.
இந்நிலையில் இது வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் செயல்படுகிறது. இந்த ரயிலின் டிக்கெட் முன்பதிவு 120 நாட்களுக்கு முன்பே தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து ரயில் தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் இந்த ரயில் செல்லும் நேரம் தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதன்படி வரும் 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பகல் 1.35 மணிக்கு ரயில் புறப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.