கோடை விடுமுறை காலத்தில் பலர் தங்கள் குடும்பத்தோடு வெளியூர் பயணங்களை திட்டமிடுகின்றனர். எனினும் நாம் முன்பே திட்டமிடாமல் அவசரமாக முடிவு செய்து அதற்குரிய ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது, ​ நமக்கு உறுதியான கன்ஃபார்ம் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை. இதற்கிடையில் பல சமயங்களில் வெய்டிங் லிஸ்ட் டிக்கெட், அதாவது காத்திருப்பு பட்டியல் டிக்கெட் தான் கிடைக்கும். முன்னதாகவே திட்டமிட்டு புக்கிங் துவங்கிய சில நிமிடங்களிலேயே புக் செய்தால் அனைத்து டிக்கெட்டுகளும் புக் ஆகி விடுகிறது.

ஏசி 3-டயர், ஏசி 2-டயர் மற்றும் முதல் வகுப்பு

இந்த வகுப்புகளுக்கான முன் பதிவு விண்டோ காலை 10 மணிக்கு திறக்கப்படும். நீங்கள் இதன் விண்டோவில் உங்களின் பயணம் மற்றும் பயணிகள் விபரங்களை உள்ளிட வேண்டும். ஒவ்வொரு வகுப்பிலும் தத்கால் முன் பதிவுக்கு சில இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே சீக்கிரமாக முன்பதிவு செய்ய வேண்டும்.

ஸ்லீப்பர் வகுப்பு

ஸ்லீப்பர் வகுப்புக்குரிய தக்கால் முன் பதிவு விண்டோ காலை 11 மணிக்கு திறக்கப்படும். அதற்கு சென்று உங்களின் பயணம் மற்றும் பயணிகள் விவரங்களை உள்ளிடவேண்டும். இந்த வகுப்பிலும் தத்கால் முன்பதிவுக்கு சில இருக்கைகள் இருக்கிறது. எனவே சீக்கிரமாக முன்பதிவு செய்ய முயற்சி செய்ய வேண்டும்.