நாம் ஒரு மோட்டார் வாகனம் வாங்க சென்றால் முதலில் அதன் மைலேஜை சரிபார்ப்பது வழக்கம். எனினும் தினசரி கோடிக்கணக்கான மக்களை ஏற்றிச்செல்லும் இந்திய ரயில்வேயின் இன்ஜின்கள் எவ்வளவு மைலேஜ் தருகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இந்திய ரயில்வேயின் டீசல் இன்ஜின் மைலேஜ் தொடர்பாக நாம் தெரிந்து கொள்வோம். இந்திய ரயில்வேயானது மின்சார இன்ஜினை நோக்கி நகர்கிறது.

இருந்தாலும் டீசல் என்ஜின் இன்னும் பல்வேறு ரயில்களை இழுக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், 1 லிட்டர் டீசலில் ரயில் எத்தனை கி.மீ ஓடுகிறது என்ற கேள்வி இப்போது எழுந்து உள்ளது. அனைத்து ரயில்களுக்கும் தனித்தனி மைலேஜ் இருக்கிறது. ஏனெனில் உள்ளூர் ரயில் ஒவ்வொரு நிறுத்தத்திலும் நிற்கிறது. மற்றொருபுறம் எக்ஸ்பிரஸ் ரயில் குறைந்த இடங்களிலே நிற்கிறது. இதனிடையே 1 டீசல் இன்ஜின் 12 பெட்டிகள் உடைய பயணிகள் ரயிலை இழுக்கும்போது, ​​1 கிலோ மீட்டருக்கு 6 லிட்டர் டீசல் செலவாகும் என்று தகவல் தெரிவிக்கிறது.

டீசல் என்ஜின் 12 பெட்டிகளுடைய எக்ஸ்பிரஸ் ரயிலை இழுக்கையில், ​​4-4.5 லிட்டரில் ஒரு கி.மீ பயணம் மேற்கொள்கிறது. டீசல் என்ஜின் 24 பெட்டிகளுடைய ரயிலை இழுக்கையில், ​​அது 6 லிட்டரில் ஒரு கி.மீ ஓடும். எக்ஸ்பிரஸ் ரயில்களை விடவும் பயணிகள் ரயில்களில் அதிகளவு டீசல் பயன்படுத்தப்படுகிறது. பயணிகள் ரயிலானது அதன் வழித்தடத்தின் ஒவ்வொரு நிலையத்திலும் நின்று கொண்டு இயங்குகிறது. பயணிகள் ரயில் நிறுத்தங்களும் மிக அருகே இருக்கிறது. மற்றொருபுறம் எக்ஸ்பிரஸ் ரயில் குறித்து பேசினால் அதன் நிறுத்தம் மிகவும் குறைவாக இருக்கிறது. இதன் காரணமாக ரயிலில் பிரேக் குறைவாகவும், ஆக்ஸிலரேட்டர் அதிகமாகவும் பயன்படுத்தப்படுகிறது.