இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றுக் கொள்வதாக கடந்த 19-ஆம் தேதி அறிவித்தது. 2000 ரூபாய் நோட்டுகள் மக்கள் மத்தியில் இருந்தால் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் அல்லது மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஒரு நாளைக்கு வங்கியில் 20 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியும் அல்லது டெபாசிட் செய்ய முடியும்.

இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்ற ஆதார் கார்டு அவசியமா என்பது குறித்து தற்போது பார்க்கலாம். இது குறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒருவர் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள விரும்பினால் ஆதார் போன்ற ஆவணங்களை வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு கூடுதல் தனிப்பட்ட தகவல்களை கோரிய பழைய படிவங்கள் ஆன்லைன் புழக்கத்தில் இருந்தால் போதுமானது. மேலும் 20000 ரூபாய் வரம்பிற்குள் 2000 ரூபாய் நோட்டுகளை எந்த ஒரு கோரிக்கை சீட்டும் இல்லாமல் மாற்றுவதற்கு மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்று பாரத் ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.