நாடு முழுவதும் உள்ள ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பொது பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரைக்கான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் அதில் பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், விரைவில் பொதுப்பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

முன்பதிவு இல்லாத சூப்பர் பாஸ்ட் விரைவு ரயில் ஆன அம்ரித் பாரத் ரயில் திட்டத்தை அரசு கொண்டுவந்துள்ளது. விரைவில் அனைத்து விரைவு ரயில்களிலும் குறைந்தது நான்கு பொதுப் பெட்டிகள் இருப்பது உறுதி செய்யப்படும். இதற்காக 2500 பெட்டிகளை தயாரிக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறியுள்ளார். இந்த தகவல் ரயில் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.