
இந்தியாவில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இதனால் ரயில் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல புதிய வசதிகளை ஏற்படுத்தித் தருகிறது.
அதன்படி ரயிலில் பயணிக்கும் போது செல்போன் அல்லது அதிக விலை மதிப்பு கொண்ட ஏதாவது பொருள் தவறி விழுந்தால் நீங்கள் பதறாமல் விழுந்த இடத்தின் அருகில் உள்ள எலக்ட்ரிக் கம்பத்தில் பதிக்கப்பட்டுள்ள நம்பரை நோட் செய்ய வேண்டும். ரயில்வே போலீஸ் கன்ட்ரோல் ரூம் எண் – 182 என்ற எண்ணுக்கு போன் செய்து நடந்தவற்றை கூற வேண்டும். பிறகு ரயில்வே போலீஸ் அல்லது ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பொருளை எடுத்து வைப்பார்கள். அதன் பிறகு நீங்கள் அந்த பொருளை பெற்றுக் கொள்ளலாம்.