இந்திய ரயில்வே துறை, பயணிகளின் வசதிக்காக IRCTC, UTS, NTES போன்ற பல செயலிகளை ஒன்றிணைத்து ‘Rail One’ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனிமேல் பயணிகள் ஒரே ஆப் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்வது முதல் ரயில்கள் எங்கே வருகின்றன என்பதை அறிவது வரை அனைத்தையும் எளிதாகச் செய்துகொள்ளலாம்.

​இந்த புதிய செயலியைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக, முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளுக்கு (Unreserved tickets) 3% கட்டணச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடிச் சலுகை இன்று (ஜனவரி 14) முதல் ஜூன் 14-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சாதாரண ரயில் பயணிகளுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.