இந்திய ரயில்வேயின் பொதுப் பெட்டியில் (General Coach) பயணம் செய்த பெண்களுக்கு இடையே இருக்கைக்காக ஏற்பட்ட தகராறு, பெரும் கலவரமாக மாறிய வீடியோ தற்போது இணையதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

ரயிலின் மேல் இருக்கையில் (Upper Berth) படுத்திருந்த ஒரு பெண்ணை கீழே இறங்குமாறு மற்ற பெண்கள் வற்புறுத்த, அங்கேயே வாக்குவாதம் வெடித்துள்ளது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பெண்கள், மேல் இருக்கையில் இருந்த பெண்ணின் தலைமுடியைப் பிடித்து இழுத்து, அவரை கீழே தள்ளி சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர்.

ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டும், உதைத்துக்கொண்டும் அந்தப் பெட்டியையே போர்க்களமாக மாற்றியதைக் கண்டு அருகில் இருந்த மற்ற பயணிகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

சிலர் இந்தச் சண்டையை விலக்க முயன்றாலும், ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட பெண்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த ‘பகீர்’ சண்டைக்காட்சியை ரயிலில் இருந்த யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, அது இப்போது இந்திய அளவில் பேசுபொருளாகியுள்ளது.