மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் எதிரொலியாக, பெங்களூருவில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் நாளை (மார்ச் 10, 2026) முதல் தற்காலிகமாக மூடப்படும் என ‘பெங்களூரு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம்’ அதிரடியாக அறிவித்துள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் வணிக ரீதியிலான சிலிண்டர் விநியோகத்தை திடீரென நிறுத்தியுள்ளதால், சமையல் செய்ய வழியின்றி இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிலிண்டர் விலை உயர்வு மற்றும் தள்ளுபடி ரத்து ஆகியவற்றால் ஏற்கனவே நெருக்கடியில் இருந்த ஹோட்டல் உரிமையாளர்களுக்கு, இந்த விநியோகத் தடை பேரிடியாக அமைந்துள்ளது.
இந்தத் திடீர் முடிவால் ஹோட்டல்களை நம்பி இருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள், மாணவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது.
