சென்னை மின்சார ரயில்களில் தனது வாழ்க்கை தேவைகளை சந்திக்க 80 வயது முதியவர் ஒருவர் அதிரசம் மற்றும் போளி போன்ற இனிப்புகளை விற்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
இந்த தகவல்கள் சமூகவலைத்தளத்தில் பரவியதுடன், அவரது போராட்டம் பலரது இதயத்தையும் தொட்டது. இதனிடையே, இந்த முதியவரை கண்டுபிடித்து அவருக்கு வாழ்வாதார உதவியாக ரூ.1 லட்சம் வழங்க விரும்புவதாக நடிகரும் சமூக சேவகருமான ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த லாரன்ஸ், “அந்த முதியவரின் வீடியோவை பார்த்தேன். வாழ்க்கைக்காக போராடும் அவரது உணர்வு என் மனதை பாதித்தது. அவரை தேடி அவருக்கு ரூ.1 லட்சம் உதவி செய்ய விரும்புகிறேன்.
Today, A post reached me through social media about an 80 year old man and his wife in Chennai who make sweets and polis, selling them on trains to survive. Their resilience moved me deeply. 🙏
I am ready to contribute ₹1,00,000 to support their journey, hoping it brings them… pic.twitter.com/yRYZj677Ze
— Raghava Lawrence (@offl_Lawrence) September 10, 2025
“>
யாராவது அவரை பற்றி அறிந்திருந்தால், தயவுசெய்து எனக்கு தகவல் அளிக்கவும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். சமூகத்தில் பெரும் மனதுடன் தன்னார்வச் சேவைகளில் ஈடுபட்டு வரும் லாரன்ஸ், இந்நிகழ்விலும் மனிதநேயத்துடன் முன்னிலை வகிப்பது பெருமையாக பார்க்கப்படுகிறது.
