தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 2015 ஆம் வருடம் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை மேம்படுத்துவதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாள் ஒன்றுக்கு மட்டும் லட்சக்கணக்கான பயணிகள் மெட்ரோ ரயில் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்காக சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகிறது. அதாவது மெட்ரோ ரயில் கதவுகள் மூடப்படும் நேரத்தில் பேக் அல்லது வாட்டர் பாட்டில் போன்றவற்றை வைத்து அதை திறக்க வைத்தால் மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அதுமட்டுமின்றி இது போன்ற செயல்களில் பயணிகள் ஈடுபட்டால் அடுத்தடுத்து ரயில் வரும் நேரத்தில் சிக்கல் ஏற்படும். எனவே கதவு மூடப்பட்ட உடனே கதவுகளை திறக்கும் முயற்சிப்பது போன்ற செயலில் ஈடுபட்டால் 4 ஆண்டு வரை சிறை தண்டனை ஐயாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது