சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட நிலையில் நள்ளிரவு சுமார் 11.45 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. அப்போது ரயில் என்ஜினின் முன்பக்கத்தில் கால்கள் துண்டான நிலையில் வாலிபரின் பிணம் ஒன்று சிக்கி இருந்ததைக் கண்ட ரயில் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

உடனே பயணிகளின் அலறல்  சத்தம் கேட்டு கீழே இறங்கி வந்த என்ஜின் டிரைவர் ரயிலில் வாலிபர் பிணம் சிக்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து அவர்கள் வாலிபரின் பிணத்தை மீட்டனர். அப்போது வாலிபர் உடலில் இரண்டு கால்களும் துண்டாகி இருந்தது. ரயிலில் சிக்கி இழுத்து வந்ததால் உடல் முழுவதும் காயங்களும் தலையின் பின்பகுதி சிதைந்தும் இருந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.