புனித நகரமான வாரணாசியில், கங்கை நதியின் நடுவே படகில் இப்தார் விருந்து என்ற பெயரில் அசைவ உணவுகளை உண்டு, அதன் கழிவுகளை நதியில் வீசி எறிந்த 14 பேரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
புனிதமாகக் கருதப்படும் கங்கை நதியின் நடுப்பகுதியில், பெரிய படகு ஒன்றில் சிலர் ஒன்றாக அமர்ந்து இப்தார் விருந்து கொண்டாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில், அவர்கள் கோழி இறைச்சி (சிக்கன் பிரியாணி) உண்பதும், அதன் எலும்பு உள்ளிட்ட கழிவுகளைக் கங்கை நதியிலேயே வீசி எறிவதும் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ ஹிந்து அமைப்பினர் மற்றும் உள்ளூர் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் மாநகரத் தலைவர் ரஜத் ஜெய்ஸ்வால், வாரணாசி கோத்வாலி காவல் நிலையத்தில் ஆதாரங்களுடன் புகார் அளித்தார். தனது புகாரில் அவர் கூறியிருப்பதாவது, “கோடிக்கணக்கான ஹிந்துக்களின் நம்பிக்கையாகவும், ஆன்மீக மையமாகவும் கங்கை நதி திகழ்கிறது. வெளிநாடுகளில் இருந்தும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கங்கை நீரை அருந்தவும், வழிபடவும் வருகின்றனர். இத்தகைய புனிதமான இடத்தில் அசைவ உணவுகளை உண்பதும், அதன் கழிவுகளை நதியில் வீசுவதும் ஹிந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் திட்டமிட்ட செயலாகும்.
वाराणसी गंगा में नाव पर रोजा इफ्तार पार्टी करना भारी पड़ा, 14 मुस्लिम गिरफ्तार !!
FIR दर्ज हुई है कि इन्होंने नाव पर बिरयानी खाई और हड्डियां गंगा में फेंकी, इससे धार्मिक भावनाएं आहत हुईं। pic.twitter.com/jRNW8bYORo
— Sachin Gupta (@SachinGuptaUP) March 17, 2026
புகாரின் அடிப்படையில போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் கங்கை நதியின் புனிதத்தைக் கெடுத்ததாக 14 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் (பிரிவு 295A – மத உணர்வுகளைப் புண்படுத்துதல்) மற்றும் நீர் பாதுகாப்பு மற்றும் மாசு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஏசிபி விஜய் பிரதாப் சிங் கூறுகையில், “இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அசைவ விருந்து நடந்த படகு அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்தப் படகின் உரிமையாளர் மற்றும் ஓட்டுநரின் உரிமத்தை ரத்து செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன,” என்றார். மேலும் காசியின் கௌரவத்தைச் சீர்குலைக்கும் வகையில் படகுகளை இதுபோன்ற செயல்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று படகோட்டிகளுக்குக் காவல் துறை சார்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
