திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி இவர், சென்னை கோயம்பேட்டில் சுமைதூக்கும் தொழிலாளியாக பணிபுரியும் தன்னுடைய சித்தப்பா வீட்டில் தங்கி படித்து வந்தார். கடந்த 2023-ம் ஆண்டு சிறுமி 10ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து சிறுமியை அவரது சித்தப்பா பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதன் காரணமாக சிறுமி யாரிடமும் சொல்லாத நிலையில், அவர் கர்ப்பமடையேவே இந்த விவாகரம் வெளிச்சத்திற்கு வந்தது. பின்னர் கோயம்பேடு அனைத்து மக்கள் காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து அந்த நபரை அதிரடியாக கைது செய்தனர்.
