தற்போது ரஜினி கைவசம் ஜெயிலர், லால் சலாம் ஆகிய திரைப்படங்கள் இருக்கிறது. இதில் ஜெயிலர் சூட்டிங் முடிந்துவிட்டது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு லால் சலாம் திரைப்படமானது தயாராகிறது. இந்த படத்திற்கு பின் ரஜினி நடிக்கும் புது படத்தை ஞானவேல் இயக்குகிறார். இது ரஜினிக்கு 170-வது திரைப்படம் ஆகும்.

இப்படத்தை முடித்ததும் ரஜினி நடிக்கும் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். இதில் ரஜிகாந்த்துக்கு வில்லனாக அர்ஜுன் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. அண்மை காலமாக அர்ஜுன் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.