
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் கடந்த வருடம் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்த்த நிலையில் திடீரென தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இந்த நிலையில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று விரும்பினேன் என அவரின் மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கோச்சடையான் பண மோசடி வழக்கில் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. வழக்கிற்காக பெங்களூரு வந்திருந்த அவர் சென்னை திரும்பியதும் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என விரும்பினேன். ஆனால் இறுதியில் அவர் அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்ததால் மிகுந்த வருத்தம் அடைந்தேன் என தெரிவித்துள்ளார்.