நடிகர் விஷாலின் பட தயாரிப்பு நிறுவனமான “விஷால் பிலிம் ஃபேக்டரி”யின் மேலாளர் ஹரிகிருஷ்ணனை, அவரது பொறுப்பிலிருந்து நடிகர் விஷால் நீக்கியுள்ளார்.
இதுகுறித்து நடிகர் விஷால் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், வ. ஹரிகிருஷ்ணன் இனி தமது விஷால் பிலிம் ஃபேக்டரி, தேவி சமூக சேவை அறக்கட்டளை மற்றும் விஷால் மக்கள் நல இயக்கம் ஆகிய அமைப்புகளுடன், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தத் திறனிலும் தொடர்புடையவர் அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், பொதுமக்கள், திரைத்துறை நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள், மேற்கண்ட அமைப்புகள் தொடர்பான எந்தவொரு விஷயத்திற்காகவும் திரு. வ. ஹரிகிருஷ்ணனை தொடர்பு கொள்ளவோ, கையாளவோ வேண்டாம் என்றும் அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தகவல்கள் இருந்தால், உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும் எனவும் விஷால் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிடத்தக்கது என்னவெனில், ஹரிகிருஷ்ணன் இதுவரை புரட்சித்தளபதி விஷால் மக்கள் நல இயக்கத்தின் செயலாளராகவும், நடிகர் விஷாலின் மேலாளராகவும் பொறுப்பு வகித்து வந்த நிலையில், தற்போது அந்தப் பொறுப்புகளிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளார்.