விராட் கோலி தோனியுடன் இருக்கும் புகைப்படத்தை  ட்விட்டரில் பகிர்ந்த நிலையில், அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது..

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல் சீசன் 16 போட்டியில்  சென்னை அணி வெற்றி பெற்றது. இருப்பினும், சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனியும் ஆர்சிபி நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியும் வேடிக்கையாக உரையாடும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தனது நலம் விரும்பிகளில் முதல் கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி என்பதை விராட் பலமுறை வெளிப்படுத்தியுள்ளார். ஏறக்குறைய 3 வருடங்கள் சதம் அடிக்க காத்திருந்தபோது தனக்காக யாரும் இல்லாவிட்டாலும் தோனியே செய்தியை அனுப்பியதாக அவர் கூறினார். RCB-CSK போட்டியின் போது இருவரும் சந்தித்ததால் ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

விராட் கோலியும் தோனியுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் சிவப்பு மற்றும் மஞ்சள் ஹாட் இமோஜியுடன் இந்தியாவின் தேசியக் கொடியை அவர் பதிவிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பதில் அளித்துள்ளனர். விராட் RCB + CSK = இந்தியா என்ற அர்த்தத்தை பகிர்ந்து கொண்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். விராட் பகிர்ந்த புகைப்படத்திற்கு ஜியோ சினிமாவும் ஜிஃப் வடிவில் பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல பலரும் கருத்துக்கள்தெரிவித்துள்ளனர்.அதன்படி  “ரசிகர்கள் இருவரையும் போல நடந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்” ”சின்னசாமி மைதானத்தின் சூழல் மிகவும் இனிமையானது. இரு புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களையும் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது””இத்தகைய பந்தம் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும்””ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே மீண்டும் பிளேஆஃப்களில் விளையாட வேண்டும். இந்தப் படத்துக்கு அந்தஸ்து கொடுக்க வேண்டும்””பல வருடங்களுக்குப் பிறகு இந்த இருவரையும் ஒரே களத்தில் பார்ப்பதை நான் அதிர்ஷ்டமாக உணர்கிறேன்” என ரசிகர்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்..