ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி தரப்பில் பியூஷ் சாவ்லா, பெஹ்ரன்டோர்ப், மெரிடித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

16வது ஐபிஎல் தொடரின் 25வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் விளையாடியது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணியின் துவக்க வீரர்களானகேப்டன் ரோகித் சர்மா 28 ரன்களும், இஷான் கிஷன் 38 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். சூர்யகுமார் யாதவ் ஒரு 7 ரன்னில அவுட் ஆன போதிலும், கேமரூன் கிரீன் சிறப்பாக விளையாடி 40 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சர் என 64 ரன்கள் குவித்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.. அதேபோல திலக் வர்மா 17 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடைசியில் டீம் டேவிட் 16 ரன்கள் சேர்க்க முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவரில் 192 ரன்கள் குவித்தது. இதையடுத்து ஹைதராபாத் அணிக்கு தொடக்க வீரர்களாக ஹாரி புரூக்-மயங்க் அகர்வால் ஜோடி களமிறங்கியது.

கடந்த போட்டியில் சதம் அடித்த ஹாரி புரூக் 9 ரன்களில் ஆட்டமிழந்தார், அதைத் தொடர்ந்து திரிபாதி 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் காரணமாக ஹைதராபாத் அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பவர் பிளே ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 42 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.கேப்டன் மார்க்ரம் பின்னர் கியர்களை அதிரடியாக மாற்றினார். ஆனால் எதிர்பாராதவிதமாக 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மாவும் 1 ரன்னில் ஆட்டமிழக்க, ஹைதராபாத் அணி 72 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதைத் தொடர்ந்து மயங்க் அகர்வால் – கிளாசன். நிதானமாக விளையாடிய ஹைதராபாத் அணி 13 ஓவரில் 106 ரன்கள் சேர்த்தது.பின்னர் பியூஷ் சாவ்லா வீசிய 14வது ஓவரில் கிளாசன் 20 ரன்கள் சேர்த்தார். ஆனால் அந்த ஓவரின் கடைசி பந்தில் கிளாசன் 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.மயங்க் அகர்வாலும் சிக்ஸர் அடிக்க முயன்று 48 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த மார்கோ ஜான்சன் 6 பந்துகளில் 13 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 10 ரன்களும் எடுத்தனர். இதனால் கடைசி 2 ஓவர்களில் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. அப்துல் சமத் –   புவனேஷ்வர் குமார் இருவரும் களத்தில் இருந்தனர். 19வது ஓவரில் 4 ரன்கள் எடுக்க கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது.

அந்த ஓவரை வீச மும்பை சார்பில் அர்ஜுன் டெண்டுல்கர் அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் அப்துல் சமத் ரன் அவுட் ஆக, 5வது பந்தில் புவனேஷ்வர் குமார் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹைதராபாத் அணி 19.5 ஓவரில் 178 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.. மும்பை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அர்ஜுன் டெண்டுல்கர் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து தனது முதல் ஐபிஎல் விக்கெட்டை எடுத்தார்.. அர்ஜுன் டெண்டுல்கர் 2.5 ஓவர்கள் வீசி 6.35 எக்கனாமியில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்துள்ளார்.. இதில் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகளில் விளையாடி 3ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்..