ஐபிஎல் தொடர் கடந்த 31ம் தேதி தொடங்கியது. 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மொத்தம் 7 லீக் ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கிறது.கடந்த 3ம் தேதி லக்னோவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுமார் 35 ஆயிரம் ரசிகர்கள் போட்டியை கண்டுகளித்தனர்.

இந்நிலையில்  CSK – SRH அணிகள் மோதும் போட்டி வரும் 21ஆம் தேதி சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் மற்றும் மைதானத்தில் நேரடியாகவும் பெற்றுக் கொள்ளலாம். டிக்கெட் விற்பனை 18ஆம் தேதி (இன்று ) முதல் விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியை காண ஆர்வமுள்ள CSK ரசிகர்கள், இன்று மிஸ் பண்ணாம டிக்கெட் வாங்கிக்கொள்ளவும்.