சமூக வலைதளங்களில் சமையல் வீடியோக்களுக்கு மிகுந்த வரவேற்பு உள்ள நிலையில், ஒரு தம்பதியினர் உருளைக்கிழங்கு வறுவல் செய்ய முயன்ற போது ஏற்பட்ட பயங்கரமான விபத்து குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கிராமப்புற பின்னணியில் ஒரு குடிசை போன்ற அமைப்பில் விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்த அந்த தம்பதி, ஒரு பெரிய பாத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணெயில் நறுக்கிய உருளைக்கிழங்குகளைப் போட்டனர்.

ஆனால், அடுத்த கணமே அந்த பாத்திரம் எரிமலை போல வெடித்து, அதிலிருந்து எழுந்த நெருப்புப் பிழம்புகள் கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்த முழு குடிசையையும் சூழ்ந்து கொண்டது. அதிர்ஷ்டவசமாக, சமைத்துக் கொண்டிருந்த இருவரும் உடனடியாக அங்கிருந்து குதித்து விலகியதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் இதுவரை 21 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Searee Freedom (@searee_freedom)

“>

இந்த விபத்தைப் பார்த்து பலர் அதிர்ச்சியடைந்தாலும், நெட்டிசன்கள் சிலர் வேடிக்கையான கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர். “யூடியூப் சேனல் தொடங்கும் முன்பே முடிவுக்கு வந்துவிட்டது” என்றும், “உருளைக்கிழங்கு தன் பழிவாங்கலைத் தீர்த்துக்கொண்டது” என்றும் கிண்டலாகக் பதிவிட்டுள்ளனர்.

மேலும் சமையல் செய்யும் போது ஒரு சிறிய கவனக்குறைவு எவ்வளவு பெரிய விபத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. இணையத்தில் வைரலாகும் இத்தகைய ‘குக்கிங் அட்வென்ச்சர்கள்’ சில நேரங்களில் விபரீதத்தில் முடிந்துவிடுகின்றன என்பதையே இது காட்டுகிறது.