தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் ராஜநாகம் மற்றும் கீரிப்பிள்ளை ஆகியவற்றுக்கு இடையே நடந்த ஆக்ரோஷமான சண்டையின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெறும் 38 வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவில், புல்வெளியில் தப்பிச் செல்ல முயலும் பாம்பை விடாமல் துரத்திச் செல்லும் கீரிப்பிள்ளையின் வேகம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் ஆபத்தான விஷத்தைக் கொண்ட நாகப்பாம்பு கீரியைத் தாக்கப் பலமுறை முயன்றபோதும், கீரிப்பிள்ளை தனது அபாரமான சுறுசுறுப்பால் அந்தத் தாக்குதல்களில் இருந்து லாவகமாகத் தப்பித்து, இறுதியில் பாம்பைப் பிடித்து இழுத்துச் செல்கிறது. இந்த வீடியோ ‘எக்ஸ்’ (ட்விட்டர்) தளத்தில் பகிரப்பட்ட சில நாட்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது.

“>

இந்த பாம்பின் விஷம் கீரிப்பிள்ளையை எளிதில் பாதிக்காது என்ற இயற்கை அறிவியலை இந்த வீடியோ மீண்டும் நிரூபிப்பதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். காட்டின் நியதிப்படி பலத்தை விட சமயோசித புத்தி மற்றும் வேகம் தான் வெற்றியைத் தீர்மானிக்கும் என்பதற்குச் சான்றாக இந்தச் சண்டை அமைந்துள்ளதாக மக்கள் ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.