இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள ஒரு காணொளி, பார்ப்பவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில் ஒரு சிறுவன் சாலையில் நடந்து செல்ல, அவனைத் தொடர்ந்து ஏராளமான வாத்துக் குஞ்சுகள் அணிவகுத்துச் செல்கின்றன. அந்தச் சாலையில் இன்னும் பலர் நடந்து சென்றாலும், இந்த வாத்துகள் மற்றவர்களைக் கண்டு கொள்ளாமல் அந்தச் சிறுவனை மட்டுமே நிழல் போலத் துரத்திச் செல்கின்றன.
சிறுவன் எங்குத் திரும்பினாலும், ஒரு ராணுவக் கட்டுக்கோப்புடன் அவை பின் தொடர்வது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. இந்தத் தொடர் ஓட்டத்தில் ஒரு சுவாரசியமான திருப்பமும் நிகழ்கிறது. அவர்கள் வரும் வழியில் ஒரு நபர் குறுக்கே வந்து நின்றவுடன், சிறுவனைப் பின்தொடர்ந்து வந்த அனைத்து வாத்துகளும் சட்டென அங்கேயே நின்றுவிட்டன. அந்த நபர் விலகியவுடன், மீண்டும் அதே சிறுவனைப் பின்தொடர்ந்து அவை ஓடத் தொடங்கின.
இந்தச் சிறுவன் எப்படி இவ்வளவு வாத்துகளையும் தன் வசப்படுத்தினான், அவற்றுக்கு எப்படிப் பயிற்சி அளித்தான் என்பது தெரியவில்லை. இருப்பினும், சிறுவனுக்கும் அந்தச் செல்லப் பிராணிகளுக்கும் இடையிலான இந்தத் தூய்மையான அன்பு பலரது மனதையும் கொள்ளை கொண்டு வருகிறது.
