சமூக வலைதளங்களில் ஒரு வினோதமான வீடியோ தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அதில் ஒரு நபர் தனது சாதாரண மிதிவண்டியின் முன்பக்கத்தில், ஒரு மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க்கை கயிறால் கட்டி எடுத்துக்கொண்டு பெட்ரோல் பங்கிற்கு வந்துள்ளார். அங்கிருந்த ஊழியர்களிடம் சாதாரணமாக பெட்ரோல் போடுமாறு அவர் கேட்க, அந்த நபரையும் அவரது ‘நவீன கால கண்டுபிடிப்பையும்’ பார்த்த அங்கிருந்தவர்கள் ஒரு நிமிடம் திகைத்துப் போயினர்.

இதனால் “யார் இவர்கள்? எங்கிருந்து வருகிறார்கள்?” என்ற புகழ்பெற்ற நகைச்சுவை வசனத்திற்கு ஏற்ப, அந்த நபரின் இந்த விசித்திரமான செயல் பார்ப்பவர்களைச் சிரிக்க வைத்த அதே வேளையில், பெரும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது. இந்தச் செயல் வெறும் வேடிக்கைக்காகச் செய்யப்பட்டதா அல்லது பாதுகாப்பாக பெட்ரோலை எடுத்துச் செல்வதற்கான அந்த நபரின் சொந்த ஐடியாவா என்பது தெரியவில்லை.

“>

மேலும் பொதுவாக கேன்களில் பெட்ரோல் வாங்குவதற்குப் பல கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், இவர் நேரடியாக பைக் டேங்க்கையே கழற்றி எடுத்து வந்தது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இணையவாசிகள் இதனைப் பகிர்ந்து “இந்தியாவின் தொழில்நுட்பத்திற்கு அளவே இல்லை” எனப் பல்வேறு நகைச்சுவையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.