ஒருவரின் வலிமையை அவரது தோற்றத்தை வைத்து எடைபோட முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில், முனிவர் வேடமிட்ட முதியவர் ஒருவர் ஜிம்மில் அதிக எடையைத் தூக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காவி அங்கி மற்றும் தலைப்பாகை அணிந்த அந்த முதியவரை, அங்கிருந்த இளைஞர்கள் முதலில் கேலி செய்துள்ளனர்.
ஆனால், அவர் கனமான பார்பெல்லை மிக எளிதாக ‘டெட்லிஃப்ட்’ செய்து தூக்கியபோது, கிண்டல் செய்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். “பிரம்மச்சரியத்தின் வலிமை” என்ற பெயரில் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ, பல மில்லியன் பார்வைகளைப் பெற்று இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவைச் சமூக வலைதளங்களில் பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர். “சாமியார்களின் ஒழுக்கமும் பயிற்சியும்தான் இத்தகைய வலிமையைத் தருகிறது, யாரையும் ஆடையை வைத்து மதிப்பிடாதீர்கள்” என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
जिम में गरीब साधु देखकर मजाक बना रहे थे
साधु बाबा ने जिम वालों की बोलती बंद कर दी
ब्रह्मचारी पॉवर 🔥💪 pic.twitter.com/0u2SfPOb5x
— Mahendra Bahubali 🇮🇳 (@Bahubali_IND2) March 2, 2026
“>
அதே சமயம், முதியவர் எடையைத் தூக்கும் விதம் சரியாக இல்லை என்றும், இது முதுகுத்தண்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் உடற்பயிற்சி ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். எது எப்படியிருந்தாலும், ஒரு முதியவரின் இந்த அசாத்திய முயற்சி இளைஞர்களுக்குப் பெரிய ஊக்கத்தை அளிப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
