பால் உற்பத்தியாளர்கள் நலனை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். பால் உற்பத்தியை பெருக்கவும், கால்நடைகளின் நலனை பேணவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் ஒரு மாநிலத்தின் பால் உற்பத்தி பகுதியில் மற்ற மாநிலத்தின் பால் உற்பத்தி நிறுவனம் தலையிடுவதில்லை.

எனவேதான் மத்திய அரசுக்கு தமிழகத்தின் பால் உற்பத்தி பகுதியில் வேறு மாநிலங்களை சேர்ந்த நிறுவனங்களை அனுமதிக்க வேண்டாம் என்று முதல்வர் கடிதம் எழுதியுள்ளதாக குறிப்பிட்டார். பால் உற்பத்தியாளர்கள் யாரும் எந்த சலசலப்புக்கும் அஞ்ச வேண்டாம் எனத் தெரிவித்தார்.