நாகாலாந்து மாநில சுற்றுலா மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் தேம்ஜென் இம்னா அலோங், தனது நகைச்சுவை உணர்வால் மீண்டும் இணையதளவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். தன்னை புகைப்படம் எடுக்க முயன்ற பெண்ணிடம் அவர் அளித்த கலகலப்பான பதில் தற்போது வைரலாகி வருகிறது.

நாகாலாந்து அரசியலில் மிகவும் சுறுசுறுப்பாகவும், எளிமையாகவும் வலம் வருபவர் அமைச்சர் தேம்ஜென் இம்னா அலோங். அண்மையில் அவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றபோது, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அவருடன் பேசவும், புகைப்படம் எடுக்கவும் மிகுந்த ஆர்வம் காட்டினர். அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருடன் நடந்து சென்ற அமைச்சரை வழிமறித்து பலரும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

அனைவரையும் புன்னகையுடன் எதிர்கொண்ட அமைச்சர், கூட்ட நெரிசலுக்கு மத்தியிலும் பொறுமையாக நடந்து சென்றார். அப்போது அங்கிருந்த பெண் ஒருவர், அமைச்சரை நிறுத்தி அவருடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். தனக்கு நேரமாகிவிட்டதை உணர்ந்த அமைச்சர், அந்தப் பெண்ணிடம் கோபப்படாமல் சிரித்துக்கொண்டே, “இப்போ விட்டா என் ஹெலிகாப்டர் கிளம்பிடும்.. நாம அடுத்த முறை கண்டிப்பா போட்டோ எடுத்துக்கலாம்” என்று நகைச்சுவையாகக் கூறிவிட்டு நகர்ந்தார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Temjen Imna Along (@alongimna)

அமைச்சரின் இந்த உடனடி பதிலைக் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். அந்தப் பெண்ணும் அமைச்சரின் பதிலைக் கேட்டுப் புன்னகையுடன் வழிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான சில நிமிடங்களிலேயே வைரலானது. அமைச்சரின் எளிமையையும், சமயோசிதமான நகைச்சுவை உணர்வையும் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

மிகவும் எளிமையான மற்றும் ‘கூல்’ ஆன அரசியல்வாதி இவர் தான்” எனப் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார். எவ்வளவு பிஸியாக இருந்தாலும், ஒருவரை நோகடிக்காமல் நகைச்சுவையால் சமாளிப்பது ஒரு கலை எனப் பலரும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் தேம்ஜென் இம்னா அலோங், ஏற்கனவே தனது சிறிய கண்கள் மற்றும் வடகிழக்கு மாநில மக்களின் கலாச்சாரம் குறித்து நகைச்சுவையாகப் பேசி இந்தியா முழுவதும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.