ராமர் பிறந்த இடத்திலேயே கோயில் கட்டிய பிரதமர் மோடியை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம் என்று இசைஞானி இளையராஜா புகழாரம் சூட்டியுள்ளார். அன்று மன்னர்கள் கோயில் கட்டிய நிலையில், இன்று பிரதமர் கோயில் கட்டியுள்ளார்; இதை சொல்லும்போது கண்ணீர் வருகிறது; என்றும் அழியா புகழ் பிரதமர் மோடிக்கு கிடைத்துள்ளது என புகழ்மாலை சூட்டிய அவர், இந்த நாளில் நான் அயோத்திக்கு செல்ல முடியாதது வருத்தமாக உள்ளது என்றார்.