இங்கிலாந்தின் டவர் ஹாம்லெட்ஸ் பகுதியில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் நடந்த வித்தியாசமான சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பொதுமக்களின் தகவலின்படி, சூர்யா என அடையாளம் காணப்பட்ட ஒருவர், மனஅழுத்தத்துடன் அங்கு நின்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு இருந்த சிலர், அவர் ஒரு பெண்ணை தொந்தரவு செய்ததாக குற்றம் சாட்டினர்.

எனினும், தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. சம்பவ இடத்திலேயே, தாம் எந்த தவறும் செய்யவில்லை என்றும், அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் தான் குற்றமற்றவர் என்பதைக் காட்டும் என்றும் சூர்யா சத்தமாக வாதிட்டார். மேலும், தாம் நவீன அடிமைத்தனத்தின் பலியாக உள்ளேன், எனக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை என்றும் கூறினார். இதனிடையே, தொடர்ந்து “மோடி இஸ் மை டாடி” என்று முழங்கியதும், அங்கு இருந்த பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.

சாட்சியர்கள், அந்த நபர் மனநிலை பாதிப்புடன் இருந்ததாகவும், அவரது நடத்தை சீரற்றதாக இருந்ததாகவும் தெரிவித்தனர். இந்த வாக்குவாதத்தின் ஒரு பகுதி வீடியோவாக பதிவாகி, விரைவில் இணையத்தில் பரவியது.

 

View this post on Instagram

 

A post shared by Mr Hamlets 🇵🇸 (@mr_hamlets)

“>

சம்பவம் நடந்தது 2025 ஆகஸ்ட் 9-ந்தேதி என்றாலும், இதுவரை உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் எந்தவித அதிகாரபூர்வ புகாரையும் அல்லது புதுப்பிப்பையும் வெளியிடவில்லை. எனவே, சம்பவத்தின் முழு பின்னணி இன்னும் தெளிவாக இல்லை.