பிரதமர் நரேந்திர மோடியும் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் இணைந்து எடுத்த ‘மெலோடி’ செல்ஃபி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் இதை கடுமையாக விமர்சித்துள்ளார். நாடு பல்வேறு நெருக்கடியான சூழல்களை எதிர்கொண்டு வரும் வேளையில், பிரதமர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது பொருத்தமற்றது என்பதை உணர்த்தும் வகையில், “மெலோடி ந போஜ்யம்” என கிண்டலாகக் குறிப்பிட்டு தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
Melody na Bhojyam 😂😂😂 #justasking https://t.co/ptKp7qjZT9
— Prakash Raj (@prakashraaj) May 20, 2026
“>
மேலும் வழக்கமாக பிரகாஷ் ராஜ் மோடி அரசை விமர்சிக்கும்போது அவரை கடுமையாக விமர்சிக்கும் இணையவாசிகள், இந்த முறை அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை, வேலைவாய்ப்பின்மை மற்றும் பிற முக்கியப் பிரச்சனைகளைக் கவனிப்பதை விடுத்து, பிரதமர் இது போன்ற ‘குழந்தைத்தனமான’ செயல்களில் ஈடுபடுவதாகக் கூறி, பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியையும் கிண்டலையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
