NDA கூட்டணியின் நாடாளுமன்ற தலைவராக பிரதமர் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவருடைய கால்களை பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் தொட்டு வணங்கியது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் வியூக வகுப்பாளரும் சமூக செயற்பாட்டாளருமான பிரசாந்த் கிஷோர்இதுகுறித்து விமர்சித்துள்ளார்.
அதாவது, ஒரு மாநிலத்தின் முதல்வர் என்பவர் அந்த மாநில மக்களுடைய பெருமை. மாநிலத்தின் முதல்வராக இருக்கக்கூடிய நிதிஷ்குமார் மோடியின் கால்களை தொட்டதன் மூலமாக பீஹாருக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
