மை லார்டு என்று அழைப்பதை நிறுத்தினால் தனது ஊதியத்தில் பாதையை தருவதாக உச்ச நீதிமன்ற நீதிபதி பி எஸ் நரசிம்மா நகைச்சுவையாக தெரிவித்தார். நீதிபதியை மை லார்டு என்று வழக்கறிஞர்கள் அழைப்பது வழக்கம். ஒரு வழக்கு விசாரணையின் போது நீதிபதி பி எஸ் நரசிம்மாவை ஒரு வழக்கறிஞர் மை லார்டு என்று பலமுறை அழைத்தார். எத்தனை முறை தான் மை லார்டு என அழைப்பீர்கள், சார் என்று அழைத்தாலே போதும் என்று அறிவுறுத்தினார்.