மதுரையில் வருடந்தோறும் சித்திரை திருவிழாவானது வருடந்தோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடம் சித்திரை திருவிழா முன்னிட்டு வரும் மே 5ஆம் தேதி மதுரைக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். வருகின்ற 3ஆம் தேதி தங்க பல்லக்கில் ஆலயத்தை விட்டு மதுரைக்கு புறப்படும் கள்ளழகர் மே 5ஆம் தேதி தங்க குதிரையில் வைகை ஆற்றில் எழுந்தருளுவார்.

பின்பு வண்டியூர் பகுதியில் உள்ள தேனூர் மண்டபத்தில் சேஷ வாகனம், கெருட வாகனத்தில் காட்சி தருவார். இந்த திருவிழாவில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இதனை முன்னிட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்குவதை பார்ப்பதற்கு பல ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி ஒவ்வொரு வருடமும் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்கு முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மாவட்ட பாஜக தலைவர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை வழங்கியுள்ளார். அதில் சித்திரை திருவிழாவை ஒட்டி வரும் மே ஐந்தாம் தேதி முதல் 9ஆம் தேதி வரை மதுரையில் உள்ள அனைத்து மதுபான கடைகளையும் மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.