தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே பொது தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. அதே சமயம் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி தேர்வுகள் முடிவடையும் நிலையில் ஏப்ரல் 29 முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில் கோடை விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதித்து தமிழகத்திலேயே முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மீறி பள்ளிகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிகள் இது குறித்து புகார் அளிக்க அலுவலகம் 04286 – 232094, 94899-00303. மாவட்டக் கல்வி அலுவலகம் (இடைநிலை), 04286 – 223762, 94899 00301, மாவட்டக் கல்வி அலுவலகம் (தனியாா் பள்ளிகள்), 04286 – 293981, 90808-38995 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் இது தொடர்பான அறிவிப்பு அடுத்த கட்ட வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.