மேஷ ராசி அன்பர்களே,

இன்று வேண்டாத நபர் ஒருவரை பொது இடத்தில் சந்திக்க வேண்டி இருக்கும். எண்ணத்திலும் பேச்சிலும் கட்டுப்பாடு அவசியம். தொழில் உற்பத்தி விற்பனை சுமாராகத்தான் இருக்கும். புதிய இடங்களில் பண செலவு கொஞ்சம் ஏற்படும். போக்குவரத்தில் பொறுமையை கடைப்பிடியுங்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். பெண்களுக்கு இன்று நல்ல நாளாக உள்ளது. பேச்சாற்றலை வெளிப்படுத்துவீர்கள்.

தாய் வீட்டு சீதனத்தை கேட்டு பெறக்கூடிய அமைப்பு உள்ளது. இன்று மாணவர்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள். பொருளாதாரத்தை விருத்தி செய்து கொள்வீர்கள். கல்வி மீது அக்கறை கொள்வீர்கள். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்: மூன்று மற்றும் ஐந்து
அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்