மேஷம் ராசி அன்பர்களே,

இந்த நாள் உங்களுக்கு சுறுசுறுப்பு மேலோங்கும் நாளாக இருக்கும். திருமண முயற்சிகள் கண்டிப்பாக கைகூடும். சிறப்பாக கடல் தாண்டி வரும் செய்தி மகிழ்ச்சியை கொடுக்கும். இரவு நேர பயணங்கள் மகிழ்ச்சியை கொடுக்கும். எதிலும் முன்னேற்றம் கருதி எடுக்கும் முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். கலைத்துறை சார்ந்தவர்களுக்கு நல்ல விஷயம் நடக்கக்கூடும்.

வெளிநாடு சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சூழல் ஏற்படும். எதிலும் எதிர்பார்க்கப்பட்ட லாபம் கம்மியாக தான் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டியது இருக்கும். பெண்களுக்கு இஷ்ட தெய்வத்தின் அருள் துணையாக இருக்கும்.

மனமகிழ்ச்சி பொங்கும். சந்தேக பார்வையை தவிர்க்கவும். இன்று மாணவர்கள் கல்விக்கான செலவை தயார் செய்து கொண்டிருப்பீர்கள். தடைகளை உடைத்து எறிந்து வெற்றி பெற முடியும். படிப்பில் அக்கறை கொள்ளுங்கள். இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அண்ணமாக வைத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: ஆறு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்