மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 207 இடங்களைக் கைப்பற்றி இமாலய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இன்று சுவேந்து அதிகாரி முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

​மேற்கு வங்க மண்ணில் முதல்முறையாக பாஜக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததை அங்கீகரிக்கும் விதமாகவும், அதற்காக உழைத்த தொண்டர்கள் மற்றும் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் பிரதமர் மோடி மேடையிலேயே தரையில் விழுந்து தனது மரியாதையைச் செலுத்தினார்.

ஒரு நாட்டின் பிரதமர், மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்து இவ்வாறு சாஷ்டாங்கமாகத் தரையில் வீழ்ந்து வணங்கியது அங்கிருந்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த உணர்ச்சிகரமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.