சேலம் மாவட்டத்தில் இருந்து அரசு பேருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 63 பேர் இருந்தனர். அந்த பேருந்தமதை சிவக்குமார் என்பவர் ஓட்டி சென்றார். கண்டக்டராக ராஜா என்பவர் பணியில் இருந்தார். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சென்னியாண்டவர் கோவிலை தாண்டி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென என்ஜின் பகுதியில் இருந்து வித்யாசமான சத்தம் கேட்டது. இதனால் சிவகுமார் பேருந்தை மேம்பாலத்தின் ஓரம் நிறுத்தி பேருந்தை ஆப் செய்து ஸ்டார்ட் செய்தார்.

அதன் பிறகும் இஞ்சினில் இருந்து ஏதோ சத்தம் கேட்டதால் உடனடியாக டிரைவர் பயணிகளை கீழே இறங்க சொன்னார். சிறிது நேரத்தில் பேருந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது. சரியான நேரத்தில் டிரைவர் பயணிகளை கீழே இறக்கி விட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதுm இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.