நடிகர் விஜய்க்கும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இடையேயான அரசியல் உறவில் எப்போது விரிசல் விழுந்தது என்ற கேள்வி பலருக்கும் எழுந்து வருகிறது. ஆரம்ப காலக்கட்டத்தில் விஜய் அரசியலுக்கு வருவதை சீமான் பெரிதும் பாராட்டியதோடு, அவருக்குப் பலமுறை ஆதரவுக் குரலும் கொடுத்தார். ஆனால், தற்போது அந்த ஆதரவுகள் அனைத்தும் காணாமல் போய், சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகத்தை’ (தவெக) எதிர்க்கும் பிரதான கட்சிகளில் ஒன்றாக மாறியுள்ளது. இந்தக் கருத்து வேறுபாடுக்கான காரணம் குறித்து சீமான் பேசியுள்ள காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் அரசியலுக்கு வருவதை தான் தனிப்பட்ட முறையில் வாழ்த்திய போதும், இது “கொஞ்சிக் கொஞ்சிக் கால்களைக் கடிக்கும் மீன்கள் இருக்கக்கூடிய குளம் அல்ல, ராட்சத முதலைகள் இருக்கக்கூடிய குளம்” என்று அறிவுரை கூறும் வகையில் விஜய்யிடம் தெரிவித்த கருத்தை, விஜய் அவர்கள் ஒரு மேடையில் கிண்டல் செய்யும் தொனியில் பேசியதாகச் சீமான் மன வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய நன்மைக்காகக் கூறிய ஒரு கருத்தை விஜய் மேடையில் கேலி செய்தது தனக்குப் பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும், இதுவே இருவருக்கும் இடையே அரசியல் ரீதியான மோதல் போக்கு ஏற்பட முதல் காரணமாக இருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
