தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ள இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான தசரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் கீர்த்தி சுரேஷ் உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷிற்கு விரைவில் திருமணம் என்று சமீப நாட்களாக இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இதற்கு கீர்த்தி சுரேஷின் பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் திருமணம் குறித்து கீர்த்தி சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்த கீர்த்தி சுரேஷ், இப்போதைக்கு அந்த பேச்சுக்கே இடம் இல்லை என்று மறுத்துள்ளார்.