தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் விக்ரம் படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் விஜயுடன் சேர்ந்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், பிக் பாஸ் புகழ் ஜனனி, மன்சூர் அலிகான், கதிர், அர்ஜுன், சஞ்சய்தத் போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் முதல் கட்ட சூட்டிங் காஷ்மீரில் நடந்து முடிந்த நிலையில் அடுத்த கட்ட சூட்டிங் சென்னையில் தொடங்கியுள்ளது.

மொத்த படப்பிடிப்பையும் லோகேஷ் மே மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ள நிலையில் படம் அக்டோபர் 19-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் லியோ படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது லியோ  படத்தில் நடிகர் விஜய்க்கு அடுத்தபடியாக முக்கியமான ரோலில் சிங்கம் ஒன்று நடிக்க இருக்கிறதாம். இந்த சிங்கத்தை பல கோடி செலவு செய்து தத்ருபமாக சிஜியில் உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. மேலும் லியோ படத்தின் அப்டேட்டுகள் நாளுக்கு நாள் வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.