கர்நாடக மாநிலத்தின் துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மேகதாது திட்டத்தை அமல்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீர்பாசனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், “கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடுவதை தமிழக அரசு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும்.
காவிரி நடுவர்மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளில் மேகதாது பற்றி குறிப்பிடப்படவில்லை. தமிழகத்திற்கு உரிமையுள்ள கட்டுப்பாடற்ற நீர்ப்பிடிப்பு பகுதியில் அணை கட்டுவோம் என்பது ஏற்கத்தக்கதல்ல” என தெரிவித்துள்ளார்.
