முழங்கால் வலி காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி. சிகிச்சை முடித்து இன்று சேலத்தில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பியவர், சில நாட்கள் அங்கு தங்கியிருந்து ஓய்வு எடுக்க இருக்கிறார். அதற்கு பின்னரே சென்னைக்கு வந்து அலுவல்களை கவனிப்பார் என்று தெரிகிறது. முழங்கால் வலியின் தீவிரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.