உலகப்புகழ் பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, சுமார் 136 கோடி ரூபாய் (15 மில்லியன் டாலர்) மதிப்புள்ள ‘கல்ப்ஸ்ட்ரீம் வி’ என்ற அதிநவீன தனியார் ஜெட் விமானத்தைப் பயன்படுத்தி வருகிறார். 2018-ஆம் ஆண்டு வாங்கப்பட்ட இந்த விமானம், மெஸ்ஸியின் நீண்ட தூரப் பயணங்களை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதில் 16 பேர் வரை அமரக்கூடிய வசதியுள்ள 14 சொகுசு இருக்கைகள் உள்ளன, அவை தேவைக் கேற்ப படுக்கைகளாகவும் மாற்றப்படலாம். மேலும், இதில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சமையலறை மற்றும் இரண்டு குளியலறைகள் உள்ளிட்ட சகல வசதிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த விமானத்தின் சிறப்பம்சமாக, இதன் படிக்கட்டுகளில் மெஸ்ஸியின் குடும்ப உறுப்பினர்களான அந்தோனெல்லா, தியாகோ, மேடியோ மற்றும் சிரோ ஆகியோரின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அத்துடன் விமானத்தின் வால் பகுதியில் மெஸ்ஸியின் ஜெர்சி எண்ணான ’10’ பெரிய அளவில் அச்சிடப்பட்டுள்ளது.
ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் சுமார் 11,000 கிலோமீட்டர் தூரம் வரை இடைநில்லாமல் பறக்கும் திறன் கொண்ட இந்த ஜெட், மெஸ்ஸியின் ஆடம்பரமான வாழ்க்கை முறையையும் பயணங்களின் போது அவர் விரும்பும் தனிப்பட்ட வசதிகளையும் பறைசாற்றுகிறது.
